Question
வென் படங்களைப் பயன்படுத்திச் சரிபார்: $\left( A\cup B \right) '$ =$A'\cap B'$

Need a full question paper?

Generate a complete, print-ready paper with questions like this in minutes — across 16+ boards, with answer keys.

Start Generating Free

Similar questions

ஒரு கணித வகுப்பில், 20 குழந்தைகள் அளவுகோலையும், 17 குழந்தைகள் எழுதுகோலையும்,5 குழந்தைகள் இரண்டையும் எடுத்துவர மறந்து விட்டார்கள் எனில் எத்தனை குழந்தைகள்,
(i) எழுதுகோலை மட்டும் எடுத்து வர மறந்தவர்கள்
(ii) அளவுகோலை மட்டும் எடுத்து வர மறந்தவர்கள்
(iii) வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க
வென்படங்களைப் பயன்படுத்தி $A-(B\cap C)=(A-B)\cup (A-C)$என்பதைச் சரிபார்க்க.
600 குடும்பங்கள் உள்ள ஒரு குடியிருப்பில் $\frac { 3 }{ 5 } $ பங்கு துள்ளுந்து(Scooter), $\frac { 1 }{ 3 } $ பங்கு மகிழுந்து(car), $\frac { 1 }{ 4 } $ பங்கு மிதிவண்டி(bicycle) வைத்துள்ளனர். 120 குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மகிழுந்தும், 86 குடும்பங்கள் மகிழுந்து மற்றும் மிதிவண்டியும், 90 குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மிதிவண்டியும் $\frac { 2 }{ 15 } $ பங்கு குடும்பங்கள் மூன்று வகை வாகனங்களையும் வைத்திருக்கிறார்கள் எனில்,
(i) குறைந்தது இரண்டு வகை வாகனங்களை வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை,
(ii) எந்த ஒரு வாகனமும் வைத்திருக்காத குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை காண்க.
கீழ்காணும் ஒவ்வொன்றிற்கும் வென்படம் வரைக:
(i) AU(B$\cap $C)
(ii) A$\cap $(BUC)
(iii) (AUB)$\cap $C
(iv) (A$\cap $B)UC
வென்படங்களைப் பயன்படுத்தி A -(BUC) = (A-B)$\cap $(A-C) என்பதைக் சரிபார்க்க.
ஒரு கல்லூரியில் உள்ள மாணவர்களில், 240 மாணவர்கள் மட்டைப்பந்தும் (cricket), 180 மாணவர்கள் கால்பந்தும் (football), 164 மாணவர்கள் வளைகோல் பந்தும் (hockey), 42 பேர் மட்டைப்பந்து மற்றும் கால்பந்தும், 38 பேர் கால்பந்து மற்றும் வளைகோல் பந்தும், 40 பேர் மட்டைப் பந்து மற்றும் வளைகோல் பந்தும், 16 பேர் மூன்று விளையாட்டுகளும் விளையாடுகிறார்கள். ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு விளையாட்டிலாவது பங்கேற்கிறார் எனில்,
(i) கல்லூரியில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை.
(ii) ஒரே ஒரு விளையாட்டு மட்டும் விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் காண்க
P = {x : x∈W மற்றும் 0 < x < 10} Q = {x : x = 2n+1, n∈W மற்றும் n < 5} மற்றும் R = {2, 3, 5, 7, 11, 13} எனில் P −(Q ⋂ R) = (P − Q) U (P − R) என்பதைச் சரிபார்க்க.
கோடிட்ட இடங்களை அல்லது என்ற பொருத்தமான குறியிட்டு நிரப்புக.
A = { b, c, e, g, h } , B = { a, c, d, g, i } மற்றும் C = { a, d, e, g, h } எனில் A - ( B⋂C) = (A - B) ∪ (A-C) எனக்காட்டுக.